முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பம் நாள்

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கு மக்கள் 12.05.2022 தொடக்கம் 18.05.2022 வரை ஒரு வாரத்துக்கு நினைவேந்தல் செய்வதற்கான செயல்பாட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இந் நினைவேந்தலின் முதலாவது நாளாகிய வியாழக்கிழமை (12.04.2022) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பும் மற்றும் ஏனைய பொது சிவில் அமைப்புக்களும் இணைந்து ஆரம்ப நாளை தொடக்கி வைத்து நினைவேந்தலை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வில் கஞ்சி காய்ச்சி கூடியிருந்தவர்கள் மற்றும் வீதியில் சென்று வந்தோருக்கு பரிமாறி அருந்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பம் நாள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)