முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு -  மாந்தை கிழக்கு ஒட்டங்குளம்

'முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதைகளை எம் அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்', என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்கால் அவல நிலை குறித்து அதனை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும், முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்காக நினைவு அஞ்சலியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாந்தை கிழக்கு ஒட்டங்குளம் விநாயகபுரம் பகுதியில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் மக்கள் பெற்ற துன்பங்களையும் அவர்கள் இழந்த இழப்புகளையும் நினைவுகூரும் முகமாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தகாலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இங்கு ஒன்று கூடியவர்கள் கஞ்சியை அந்த இடத்தில் காய்ச்சியதுடன் அதனை சிரட்டையில் பொதுமக்கள் என பலருக்கும் பரிமாறியிருந்தனர்.

நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், பிரதேசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு -  மாந்தை கிழக்கு ஒட்டங்குளம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More