
posted 18th May 2022
முள்ளிவாய்க்கால் 13வது ஆண்டு நினைவையொட்டி மன்னாரில் திருச் செபமாலை பவனி
தமிழினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச் செபமாலை பவனி மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள் துறவிகள் பொது நிலையினர் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.
புதன்கிழமை (18.05.2022) காலை இவர்கள் மன்னார் தீவின் நுழைவாயிலில் அமைந்துள்ள மருதமடு அன்னை வீற்றிருக்கும் திருச்சுரூப வளாகத்தில் ஒன்றுகூடி அங்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளாரால் திருச் செபமாலை ஆரம்பித்து வைக்கப்பட்டதும் மரணித்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருச் செபமாலை சொல்லப்பட்டு செபமாலை பவனி மன்னார் பேராலயம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
அங்கே மரணித்தவர்களை நினைவு கூர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் சடங்கை தொடர்ந்து கலந்து கொண்டோர் யாவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் 13வது நினைவின் நற்கருணை வழிபாடு இடம்பெற்றதுடதுடன் ஆயர் அவர்களால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மன்னாரில் சிவகரன் தலைமையில்
மே 18ந் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின படுகொலையாகிய 13 வது நினைவேந்தல் மன்னார் பகுதியில் 18.05.2022 அன்று புதன்கிழமை பல இடங்களிலும் நினைவுகூறப்பட்டன.
விஷேடமாக இன்றையத் தினம் பல ஆலயங்களில் இடம்பெற்ற மதவழிபாடுகளில் படுகொலை செய்யப்பட்டு மரணித்த ஆத்துமாக்களின் சாந்திக்காக இறை வேண்டுதல்கள் கேட்கப்பட்டது.
அத்துடன் கஞ்சு பறிமாற்றங்களும் ஆங்காங்கே இடம்பெற்றன.
அந்த வகையில் இன்றைய நாள் (18) காலையில் மன்னார் நகரில் பேரூந்து நிலையத்துக்கு முன்னால் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஞாபகர்த்தமாக தமிழின அழிப்பு நாள் நினைவு சின்னம் வைக்கப்பட்டு அவற்றுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தாழ்வுபாடு பங்கு தந்தையும் மனித உரிமை தொடர்பாக செயல்படும் அருட்பணி எஸ். ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தீபச் சுடரை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தலைமன்னார் பங்கு தந்தை அருட்பணி மார்க்கஸ் அடிகளார் நினைவுச் சின்னத்துக்கு மாலை அணிவித்ததையடுத்து, மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்க இயக்குனர் அருட்பணி நவரட்ணம் அடிகளார் மலர் அஞ்சலி செலுத்தி ஆரம்பித்து வைக்க இதில் கலந்து கொண்ட யாவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் மரணத்தவர்களின் நினைவாக கஞ்சி பறிமாறப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House