முறையற்ற ஆசிரியர் இடமாற்றம்

முறையற்ற ஆசிரியர் இடமாற்றம் காரணமாக மனமுடைந்த நிலையில் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.

வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கான பதிலீடு - 2021 எனும் தலைப்பிடப்பட்ட கடிதத்தின்படி ஏற்கனவே ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்ட இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது கஷ்டப் பிரதேசம் மற்றும் வெளிவலயங்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந. புள்ளநாயகத்தினால் இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 18.05.2022 அன்று தமது கடிதத்தில் குறிப்பிட்ட பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் ஏற்கனவே கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளைப் பூர்த்தி செய்த மற்றும் வெளிவலயப் பாடசாலைகளில் கடமையாற்றிய, வைத்திய சான்றிதழ் சமர்ப்பித்த ஆசிரியர்களது மேன் முறையீடுகள் எதுவும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
அத்தோடு இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை ஆகியவற்றுக்கிடையே தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தம்மை மனவேதனைக்குள்ளாக்குவதாக ஆசிரியர்கள் முறையிடுகின்றனர்.
எனவே தமக்கான இடமாற்றத்தினை இரத்து செய்து தருமாறு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரை வேண்டி நிற்கின்றனர்.

முறையற்ற ஆசிரியர் இடமாற்றம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY