முறைப்பாட்டு மையம்

உலக வங்கியின் நிதி அனுசரணையில் அமுல்ப்படுத்தத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் கீழமைந்த மக்கள் முறைப்பாட்டு மையம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக பொது மக்கள் 1907 என்ற இலக்கத்தின் ஊடாக சுகாதார நிறுவனங்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்பதுடன் எதிர்பாலத்தில் QR Code System ஊடாகவும் இணைய வசதிகள் மூலமும் இம்முறைப்பாடுகளை பதிவு செய்யும் விரிவாக்கல் நடைமுறை இடம்பெறவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் மேற்படி திட்டத்தை மேற்பார்வை செய்து அமுல்ப்படுத்தும் குழுவில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் அவர்கள் இன்று நடைபெற்ற PSSP மீளாய்வு கூட்டத்தில் மேற்படி குறைதீர்க்கும் பொறிமுறை பற்றி தெளிவுபடுத்தினார்

குறித்த கூட்டத்தில் வளவாளராக கலந்து கொண்ட திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் அவர்கள் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் PSSP செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தியதுடன் PSSP செயற்றிட்டத்தினை அமுல்ப்படுத்துவதில் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

முறைப்பாட்டு மையம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More