
posted 7th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மு.த. காலைவர் ஹக்கீம் நிந்தவூர், மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்திற்கு விஜயம்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூரில் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள தேவைப்பாடுகள் குறித்து நேரில் அறிந்து கொண்டார்.
மாவட்ட அலுவகமும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையமும் அமைந்துள்ள இவ்வளாகத்தில் காணப்படுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறைகள், மாணவர்களின் தேவைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் கற்கைநெறிகள் நடைபெறும் வகுப்பறைகளுக்கு விஜயம் செய்த அவர், மாணவர்களின் தேவைப்பாடுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பௌதீக அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். இதன்போது தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபிர் உள்ளிட்ட அதிகாரிகளும் முன்னாள் கல்முனை நகரபிதா சிராஸ் மீராசாகிபும் உடனிருந்தனர்.
இப் பயிற்சி நிலையத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.
நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட அலுவகம் அமைந்துள்ள இவ்வளாகம் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியின் பயனாக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)