
posted 27th May 2022
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அகத்திமுறிப்பு குளத்தின் கீழ் திட்டமிட்டதை விட குறைந்த விவசாயிகளே இம்முறை சிறுபோகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விவசாயிகளின் நெற்செய்கைக்கான நீரப்பாசனம் புதன்கிழமை (25.05.2022) சம்பிரதாய முறைப்படி திறந்துவிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாகிய கட்டுக்கரைக் குளத்துக்கு அடுத்ததாக முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அகத்திமுறிப்பு குளத்தின் கீழ் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நெற்செய்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு சிறுபோகம் அகத்திமுறிப்பு குளத்தின் கீழ் இம்முறை 482 ஏக்கரில் செய்கை பண்ணுவதற்கான இதற்கான கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
வழமையாக இக் குளத்தின் கீழ் நெற்செய்கை செய்யும் அளவு திட்டமிடப்பட்டால் விவசாயிகள் ஆர்வத்துடன் செயற்பாட்டில் இறங்கி விடுவர்.
ஆனால் இம்முறை திட்டமிடப்பட்ட முறையில் இந் நடப்பு வருடத்தில் விவசாயிகள் இக் குளத்தின் கீழ் நெற்செய்கை செய்வதில் ஆர்வம் காட்டவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்காக திட்டமிடப்பட்டதைவிட இம்முறை குறைந்த ஏக்கரிலேயே சிறுபோக நெற்செய்கையை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கான காரணங்கள் டீசல் தட்டுப்பாடு, உரம் இல்லாத நிலை மற்றும் விவசாய செய்கைக்கு பாரிய செலவு, இவற்றின் காரணமாகவே விவசாயிகள் சிறுபோகத்தில் ஆர்வம் காட்டாது இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இருந்தும் இம்முறை 356 ஏக்கரில் சிறுபோகம் செய்யப்படுவதைத் தொடர்ந்து புதன்கிழமை (25.05.2022) விவசாய நெற்செய்கைக்காக அகத்திமுறிப்பு குளத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் சிவராஜி, மன்னார் வவுனியா மாவட்டங்களின் நீர்பாசன பணிப்பாளர் நடராஜா யோகராஜா மற்றும் சிலாபத்துறை பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எஸ். மணிவண்ணன் உட்பட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY