
posted 23rd May 2022
மன்னார் நகரில் உள்ள எரிவாயு முகவர் ஒருவருக்கு எரிவாயு வந்திருப்பதாக முகநூல் ஊடாக பரப்பப்பட்ட செய்தியினால் பெருந்தொகையான மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22.05.2022) காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை அந்த முகவர் அலுவலகத்திற்கு முன்னால் தங்கள் கேஸ் சிலிண்டர்களை அடுக்கி வைத்துக்கொண்டு மக்கள் காவல் நின்றனர்.
ஆனால் எரிவாயு வரவில்லை எனவும் தங்களுக்கு இது பற்றி தெரியாது என முகவர் கூறியும் மக்கள் கேட்காத நிலையில் அந்த இடத்தில் நீண்ட நேரமாக வெயிலிலும் கடும காற்றின் தூசியிலும் காவல் நின்றனர்.
தங்களுக்கு எரிவாய்வு வரவில்லை எனவும் இதுபற்றி அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் முகவர் மக்களுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் கேட்காத பட்சத்தில் பிற்பகல் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் அவர்களை அவ்விடத்துக்கு வரவழைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
அவ்வாறு எரிவாயு வரும் பட்சத்தில் மாவட்ட செயலாளர்கருடன் கலந்துரையாடிய பின்பே இந்த எரிவாயு இங்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மன்னார் பிரதேச செயலாளர் மக்களுக்கு தெளிவு படுத்தியது பார்க்கக்கடியதாக இருந்தது.
இதன் பின்பே மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறியதையும் பார்க்கக்கடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY