மீண்டும் கியூ வரிசை

அம்பாறை மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் கடந்த இரு தினங்களாக மீண்டும் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட கியூ வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக பெற்றோல் விநியோகிக்கும் நிரப்பு நிலையங்களிலேயே தமது வாகனங்களுடன் பொதுமக்கள் நீண்ட கியூவரிசைகளில் காணப்படுகின்றனர்.

உக்கிரமடைந்திருந்த எரிபொருளுக்கான கியூவரிசையுகம் தணிந்து நிரப்பு நிலையங்களில் சுமுக நிலை ஏற்பட்டிருந்த போதிலும் அது நீடிக்காது மீண்டும் கியூ வரிசை நிலமை ஏற்பட்டுள்ளமை குறித்து மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்திய கிரெடிட் லைன் ஊடாக பெறப்பட்ட பெற்றோல் கப்பல் நேற்று நாட்டுக்கு வந்துள்ளதாகவும் விநியோகம் சீராகும் என்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார்.

மீண்டும் கியூ வரிசை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)