
posted 24th June 2023
உறவுகளின் துயர் பகிர
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)