
posted 17th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை (16) பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி மின் பாவணையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை (Solar Power Panel) வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
2023 ஜனவரி 05 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் கட்டணத் திருத்த முன்மொழிவுக்கு புதன்கிழமை (15) இலங்கை பொது பயண்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)