மாவீரர் வார அஞ்சலிகள்
மாவீரர் வார அஞ்சலிகள்

யாழ். பல்கலைக்கழகம்

திங்கள் அன்று (21) ஆரம்பமான மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீர் நினைவுத் தூபியில் மாணவர்களால் மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் வார அஞ்சலிகள்

யாழ்ப்பாணம் நல்லூர்

முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ் மாநகர சபையின் அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் வார அஞ்சலிகள்

சாட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், திங்கள் கிழமை (22) சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது அரசியல் பிரமுகர்கள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாவீரர் வார அஞ்சலிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More