மாளிகை மரகதங்கள்

அம்பாரை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழத்திற்கு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தெரிவானோர் அடங்களாக பலதுறைகளில் பிரகாசித்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாளிகை மரகதங்கள் - 2022 நிகழ்வு அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல் - ஹுசைன் பழைய மாணவர்களின் ஒருங்கமைப்பில் கிழக்கு மாகாண கணனி தொழில்நுட்ப பேரவை பணிப்பாளரும், அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் மாளிகைக்காடு அல் - ஹுசைன் வித்தியாலய கேட்போர் கூடத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

சாதனையாளர்களும், அதிதிகளும் கலாச்சார அம்சங்களுடனான முறையில் வரவேற்கப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதான அதிதியாகவும், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் முன்னிலை அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஸ்மீர், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், உதவிக்கல்வி பணிப்பாளர்களான ஜிஹானாஆலிப், நஸ்மியா சனூஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் STD பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் தில்ஷான் நிஸாம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அல் - ஹுசைன் பழைய மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகை மரகதங்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More