மாற்றம் தானாக மாறினாலொழிய மாற்றம் ஏற்படாது

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யார் பிரதமராக வந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நீங்கள் கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
நாட்டில் தற்பொழுது அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை காணப்படுகின்றது.

பிரதமரை மாற்றவேண்டும் என்று ஒரு குழு விடாப்பிடியாக நிற்கின்றது. எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது. அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளேன். அதாவது தற்போது பிரதமர் பதவி விலகினால் புதிய ஒருவர் பிரதமராக வருவார். அவடன் ஒரு புதிய அமைச்சரவை உருவாகும். அந்த அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஐவர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்கள்.

அந்த ஐவர் குழுவில் உள்ளோரில் எமக்கு திருப்தியில்லை. அவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானங்களை ஒரே நாளில் கொண்டு வாருங்கள் என நான் கூறியுள்ளேன். எனவே ஜனாதிபதி நாட்டின் தலைவர். அவர் அவ்வாறே இருப்பார். அதேபோல பிரதமர் பதவி விலகினால் இன்னொரு பிரதமர் வருவார். அவருடன் இணைந்து புதிய அமைச்சரவை உருவாகும். அவ்வாறு உருவாகும் அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்கும். இருந்தால் எவ்வாறு இருக்கும் என ஆழமாக பார்க்கவேண்டும்.

எனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலமே ஏதாவது மாற்றம் ஏற்படும்.

மேலும் தற்பொழுது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் கடந்து புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வரவேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

எனினும் அந்த விடயம் தொடர்பில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல் கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

மாற்றம் தானாக மாறினாலொழிய மாற்றம் ஏற்படாது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More