மார்பு புற்று நோய் சிகிச்சை நிலையம்

கல்முனை பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் விசேட வைத்திய ஆலோசனை வழங்கப்படுவதோடு மார்பக சத்திர சிகிச்சையும் நடைபெறவுள்ளதாக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை நிலைய திறப்பு விழாவில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம். சமீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மார்பக புற்றுநோயாளிகளின் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்படுகின்ற போது, அதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இல்லாது விடத்து நோயை வெளிப்படுத்தும் வெட்கம் காரணமாகவும், கெளரவ மனோ நிலையாலும் இருப்பார்களானால் இந்த நோயின் தாக்கம் பாரதூரமான விளைவுகள் ஏற்படுத்திவிடும். இவ்வாறான நிலைமைகளில் இருந்து தவிர்க்கும் பொருட்டு இந்த ஏற்பாடுகளை வைத்தியசாலையில் ஏற்படுத்தியுள்ளோம்.

இத்திட்டத்தின் மூலம் ஆலோசனையுடன் சேவைகள் வழங்குவதற்கும் அவசர பரிசோதனைகள் நடாத்தி நோயின் அறிகுறிகள் பாதிப்பு குறித்து கண்டறிந்து அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளவதற்குமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம். சமீம் மேலும் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டு, அதற்கான தனியான சேவை நிலையமும் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மார்பு புற்று நோய் சிகிச்சை நிலையம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More