
posted 4th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாகாண கல்விப் பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிபாபாளராக இருந்த திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவர் ஏற்கனவே மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் அதிபராகவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகவும், கடமையாற்றிய சிறந்த நிருவாகியும் அனுபவம் மிக்கவரும் ஆவார்.
அன்னாருக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக கல்விச் சமூகம் வரவேற்பினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)