
posted 13th January 2023
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாகா சபை தலைவராக இரத்தினசிங்கம் முரளீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10/01/2023 அன்று முன்னாள் தலைவர் முகமட் தலமையில் நீர்கொழும்பிலுள்ள அதன் தலமையகத்தில் காலை 10:00 மணியளவில் இடம் பெற்ற வருடாந்த தேசிய மாநாட்டிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வருடாந்தம் இடம் பெறும் இத் தேசிய மாநாட்டில் வரவேற்புரை, தலைமை உரையைத் தொடர்ந்து செயலாளரினால் கடந்த வருட பொதுச்சபை கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்தனைத் தொடர்ந்து பொருலாளரினால் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இதுவரையிலும் சந்தித்துவந்த சாவால்கள் மற்றும் எதிர்காலத்தில் வரப்போகும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது சம்மந்தமாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹெமன் குமார சிறப்புரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் செயல்ப்படும் 15மாவட்டங்களின் இணைப்பாளர்களினால் கடந்த கால செயல்ப்பாடுகள் சம்மந்தமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அதன் பின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதில் செயலாளராக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பு தலைவி சீத்தாவும், தலைவராக யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளீதரனும், பொருலளாராக மொனறாகலை மாவட்டத்தைச் சேர்ந்த டெகினிகாவும், உப தலைவராக திருகோணமலையை சேர்ந்த சந்தினிக்காவும், உப செயலாளராக காலி மாவட்டத்தை சேர்ந்த ஷாந்திராணி விஜயதுங்காவும், உட்பட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் 15 செயற்பாட்டு மாவட்டங்களிலிருந்தும் ஒவ்வொருவர் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இம் மாநாட்டில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமாரா, வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன், மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க நிர்வாகிகள், 15 செயற்பாட்டு மாவட்டங்களின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் அதன் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)