
posted 25th May 2022
'மீளாத்துயில் கொள்ளும் உறவுகளின் இல்லங்களைப் பராமரிப்போம்' எனும் தொனிப் பொருளுக்கமைய மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மயானங்களைத் துப்பரவு செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் பெரிய ஊறணி மயானம் துப்பரவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையினால் வாராந்த செயற் திட்டத்திற்கமைவாக இருதயபுரம் வட்டார உறுப்பினர் விஜயகுமார் பூபாலராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த மயானம் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களால் துப்பரவு செய்யப்பட்டது.
இதன்போது பொதுமக்களால் மயானத்திற்குள் வீசப்பட்டு, முகாமைத்துவம் இன்றிக் காணப்பட்ட, கழிவுகள் அகற்றப்பட்டதோடு, கனரக வாகனத்தைப் பயன்படுத்தி, காடாகக் காணப்பட்ட தேவையற்ற மரம், செடி, கொடிகள் அகற்றப்பட்டன.
இதேவேளை அமிர்தகழி வட்டார உறுப்பினர் தம்பிராசா இராஜேந்திரனின் முன்மொழிவுக்கமைய அமிர்தகழி விக்னேஸ்வரர் ஆலய வளாகமும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி ஆணையாளர் உ. சிவராஜா, மாநகரசபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் க. ரகுநாதன், மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிறிஸ்டி மற்றும் பிரதேச மேற்பார்வையாளர் ரி. உதயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY