
posted 17th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் மாவட்ட ஹாதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்
மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் அவர்கள் புதன்கிழமை (15) மன்னார் மேல்நீதிமன்ற நீதிபதி எம். மிஹால் அவர்களின் முன்னிலையில் காதி நீதிபதியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மௌலவி அஸீம் அவர்கள் மன்னார் புதுக்குடியிருப்பை பிறபிப்பிடமாகவும், மன்னார் நகர் மூர்வீதி ஜூம்மா பெரிய பள்ளிவாசல் பிரதான மௌலவியாகவும், மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும், மன்னார் பிரஜைகள் குழுவின் பணிப்பாளர் சபையில் உறுப்பினராகவும் , மன்னார் மாவட்டத்தில் சர்வ மதத் தலைவர் குழுமத்தில் ஒரு முக்கியஸ்தராகவும் மற்றும் இலங்கை தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்டத்தில் ஒரு உறுப்பினாராக இருந்து வருவதுடன் மன்னார் பகுதியில் இனங்களுக்கிடையே முறுகல் நிலை தோன்றும்போதும், இனங்களுக்கிடையே சமாதான சீர்குழைவு ஏற்படும்போதும், சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களுடன் இணைந்து இனம் மொழி சமயம் என்ற வேறுபாடு பார்க்காது நீதியை நிலைநாட்டி சமூகங்களுக்கிடையே சமாதானத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழும் ஒரு நல்லுள்ளம் கொண்டவராவார். அத்துடன் இவர் இப்பகுதி மக்களால் மதிப்புக்குரிய ஒரு நபராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)