மன்னார் மாவட்ட அபிவிருத்திகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் மாவட்ட அபிவிருத்திகள்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து சேவைக்கான திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான நில அளவை மன்னார் பிரதேச செயலாளருடன் இணைந்து தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரனையுடன் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகள் அவர்களால் உருவாக்கப்பட்ட காணொளி அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் கைளித்த நிகழ்வு திங்கள் கிழமை (08) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டம் நிறைய வளங்களைக் கொண்ட ஒரு மாவட்டம் என்று பலராலும் போற்றப்பட்டு வருகின்றது.

இங்குள்ள வளங்கள் சரியான முறையில் இனம்காணப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் எமது மாவட்டம் மட்டுமல்ல, எமது மாகாணம், நமது தேசம் பயன் அடையக் கூடியதாக பல்வேறு தரப்பினராலும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரீதியில் இங்குள்ள தலைமன்னார் துறைமுகம் தொடர்பாக ஆராயப்பட்டு தற்பொழுது கையளிக்கப்பட்டுள்ள கானொளியை எம்மிடம் கையளித்துள்ளீர்கள். இதற்கு ஊடகவியலாளர் ஜெகன் மற்றும் இதற்கு அனுசரனை வழங்கியுள்ள ரோட்டரி கழகத்தினராகிய உங்களுக்கு நன்றியை தெரிவித்து நிற்கின்றேன்.

நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாண்புமிகு ஜனாதிபதி, இந்திய துணை தூதுவர் மற்றும் ஆழுநர் இவர்களுக்கு இந்த காணொளி (சீடீ) அனுப்பி வைக்கப்படும்.

இந்த காணொளியானது எந்தளவுக்கு எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முன்னெடுக்கப்படும் என்பதை கவனம் செலுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

மன்னார் பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நில அளவை நிறைவேறியதும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் மன்னார் கோட்டையையும் அதன் சுற்றாடலையும் சுற்றுல்லா பயணிகளைக் கவரும்வகையில் அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான திட்டங்கள் மாவட்டத்திற்கு வருமானத்தை ஈட்டக் கூடிய சாத்தியக்கூறுகளாக அமைவதால் இது தொடர்பான நடவடிக்கைகளை அமைச்சர்களின் செயலாளர்களும், மன்னார் மாவட்ட செயலாளரும் இணைந்து இதற்கான அறிக்கை சமர்பிக்கும்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே நாம் ஒன்றினைந்து மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்திகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)