posted 26th December 2022
மன்னார் பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் பிரதேச கலாச்சார பெருவிழாவை கொண்டாடியபோது 2022 ஆம் ஆண்டு 'மன்னல்' என்ற நூல் எட்டாவது ஆண்டகாக வெளியீடு செய்யப்பட்டதுடன்,
ஐந்து கலைஞர்கள் அதாவது கலைஞர்கள் அஜந்தரூபன், திருமதி தயாளன் செல்வவனிதா, திரு அந்தோனி மரியநாயகம் அல்மேடா, சிவகௌரி புஸ்பராசன்,திருமதி றஞ்சனா கிறிஸ்ரலின் ஆகியோர் 2022 ஆம் அண்டுக்கான 'கலைசெம்மல்' விருதினை பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் இவ் விழாவை முன்னிட்டு இடம்பெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இவற்றுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)