
posted 22nd January 2023
நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபைக்கும் நான்கு பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இதில் ஒன்றான மன்னார் நகர சபைக்கு ஏழு கிராமங்களிலிருந்து 15966 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவாகி இருக்கின்றனர்.
அந்தவகையில் எழுத்தூர் பகுதியில் 3291 பேரும் . சாவற்கட்டு பிரிவில் 1869 நபர்களும் , சவுத்பாரிலிருந்து 2940 பேரும் , பனங்கட்டுகொட்டு கிராமத்திலிருந்து 1643 பேரும் . பெற்றாவிலிருந்து 732 நபர்களும் , உப்புக்குளம் பகுதியிலிருந்து 3280 பேரும் மற்றும் பள்ளிமுனை பகுதியிலிருந்து 2211 வாக்காளர்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)