மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் காலபோகம் செய்ய உத்தேசம்

2022/2023 ஆண்டுக்கான காலபோக விவசாயம் மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பிரதான குளமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 2022/2023 ஆண்டுக்கான காலபோக விவசாய செய்கையானது வழமைக்கு முன்னதாகவே இவ் விவசாய செய்கை நடப்பு வருடத்தில் செய்கை பண்ணுவதற்கான நீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் உயிலங்குளம் விவசாயிகளின் பொது மண்டபத்தில், சகல திணைக்கள அதிகாரிகள், வங்கியாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சகிதம் 12.10.2022 புதன்கிழமை காலை இடம்பெற்றது.

தற்பொழுது கட்டுக்கரைக்குளத்தில் 08 அடி அதாவது 17200 ஏக்கர் அடி நீர் இருக்கின்றதாலும், வாய்க்கால்கள் மூலம் வரக்கூடிய நீரீன் அளவு 2 அடியாக இருப்தாலும், 31333 ஏக்கரில் நெற் செய்கை பண்ணமுடியுமென நீர்பாசனப் பொறியியலாளர் சிபாரிசுக்கு அமைவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இம்முறை காலம் தாழ்த்தாது முன்கூட்டியே விவசாயத்தைத் தொடங்கும் முகமாக ஒக்டோபர் 21 ஆந் திகதி (21.10.2022) வெள்ளிக்கிழமை கட்டுக்கரைக்குளத்திலிருந்து நீர் திறந்து விடப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் காலபோகம் செய்ய உத்தேசம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More