மன்னார் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க. கனகேஸ்வரன், மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக இன்று சனிக்கிழமை (23) காலை பதவியேற்கிறார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கே. கனகேஸ்வரன் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளரினால் நிமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக்கடிதம் கையளிக்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.

1998 முதல் 2003 செப்ரெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் அவர் 2004 ஓக்ரோபர் முதல் 2015 ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றினார்.

2015 ஜூன் முதல் 2019 செப்ரெம்பர் வரையில் மருதங்கேணிப் பிரதேச செயலாளராகவும், 2019 ஒக்டோபர் முதல் 2019 டிசெம்பர் வரையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் அவர் பணியாற்றினார்.

2019 டிசெம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராகப் பணியாற்றியவேளை நிர்வாக சேவை விசேட தரத்துக்குத் தேர்வாகிய அவர், 2023 நவம்பர் 22 முதல் தற்போது வரை வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றுகின்றார்.

இந்தநிலையில் சனிக்கிழமை முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராகப் பதவியேற்கும் வகையில் வியாழக்கிழமை (21) அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

மன்னார் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More