posted 16th October 2022
மாணவர்கள் இரவில் கல்வி கற்கும் நேரங்களில் மன்னாரில் மின் வெட்டை நடைமுறைப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி செயல்பாடானது மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் பிரதேச சபை மின்சார சபைக்கு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, இரவில் மின் வெட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபையின் வாராந்த அமர்வு வெள்ளிக்கிழமை (14.10.2022) இதன் தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றபோது;
மன்னார் தீவில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது மன்னாரில் மின் தடை ஏற்படாத தன்மையில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நாட்டில் குறிப்பிட்ட நேரங்களில் மின் தடைகள் இடம்பெற்று வந்தபோதும் அப்பொழுது மன்னாரிலும் மின் தடை அமுலில் இருந்தது.
இருந்தும் மன்னார் பிரதேச சபை அன்று காற்றாலை மின் உற்பத்தி மின்சார சபையிடம் தங்கள் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மின் தடை மன்னாரில் நீக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்பொழுது சில தினங்களாக மீண்டும் அதாவது மாணவர்கள் இரவில் படிக்கும் நேரங்களில் மின் தடை இடம்பெற்று வருவதை மன்னார் பிரதேச சபையின் அமர்வில் இவ்விடயம் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக காற்றாலை பகுதியில் அமைந்துள்ள மின்சார சபை அதிகாரிகளுடன் உடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறி செயல்பட்டால் காற்றாலை பகுதியில் தாங்கள் அமைதி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என சபையின் தீர்மானத்தை சுட்டிக்காட்டியதாகவும், இதைத் தொடர்ந்து இரவில் மன்னாரில் மின் தடை ஏற்படாது இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சார சபை அதிகாரி தெரிவித்திருந்ததாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
இதற்கமைய இரவு வேளையில் மன்னாரில் இடம்பெற்று வந்த மின் தடையானது சனிக்கிழமை (15.10.2022) முதல் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY