
posted 10th May 2022
மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் குடும்பத்தினர் எரிபொருள் பெறுவதிலுள்ள சிரமங்களை தவிர்த்து மன்னாருக்கு வரும் எரிபொருட்களை யாவருக்கும் சமமாக பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் திங்கள் கிழமை (09.05.2022) இது தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் விவசாயம் மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீர்செய்யலாம் தொடர்பாக மன்னார் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மீனவ சங்கங்கள் எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் யாவரும் ஒன்றினைந்து இது விடயமாக கலந்துரையாடியுள்ளோம்.
இதன் அடிப்படையில் எவ்வாறு எரிபொருள் நிலையங்களிலிருந்து எந்தெந்த சங்கங்களுக்கு எவ்வாறு எரிபொருள் வழங்கலாம் என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குடும்பங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவாதிருக்கு முகமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.05.2022) முதல் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வீட்டுத் தேவைக்கான மண்ணெணெய் பெறுவதற்கான குடும்ப அட்டைகள் விநியோகம் செய்து விடுவோம்.
இந்த குடும்ப அட்டையின் மூலமே அவர்களுக்கான வீட்டுத் தேவைக்கான மண்ணெணெய் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மண்ணெணெய் மட்டுமல்ல ஏனைய தேவைகளுக்கும் இவ் குடும்ப அட்டைகள் மூலம் ஒவ்வொரு குடும்பங்களும் தங்கள் பொருட்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயிகள் பொறுத்தமட்டில் ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் சிறுபோகம் செய்வதற்கு 12 ஏக்கருக்கு ஒரு ஏக்கர் வீதம் நெற்செய்கை செய்வதற்கு தீர்மானிக்கப்படடிருந்தது
ஆனால் இது தற்பொழுது பத்து ஏக்கருக்கு ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் சிறுபோகம் செய்யலாம் என்றவாறு திருத்தப்பட்டுள்ளது.
ஆகவே ஒரு ஏக்கருக்கு மூன்று உழவுகளுக்காக விவசாயிகளுக்கு 25 லீற்றர் டீசல் வழங்குவதற்காக தற்பொழுது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாவது உழவுக்கு பத்து லீற்றர் டீசலும், பின் ஒரு வாரம் கடந்து இரண்டாவது உழவுக்கு எட்டு லீற்றர் டீசலும் இதைத் தொடர்ந்து மூன்றாவது உழவுக்கு மிகுதி டீசல் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழங்கும் எரிபொருள் நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இவ் நெற் செய்கையில் ஈடுபடும் கமக்காரர்களின் விபரங்களை கமநல சேவை நிலையங்கலிருந்து பெறப்பட்டு அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட இருக்கின்றது என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY