
posted 13th May 2022
மன்னாரில் ஒரு வாரத்துக்குப்பின் வியாழக்கிழமை (12.05.2022) மண்ணெணெய் மன்னார் மாந்தை மேற்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்துக்கு எரிபொருள் வந்ததுதம் மண்ணெணெய் மற்றும் பெற்றோலுக்காகவும் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நுகர்வோர் நின்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதை காணக்கூடியதாக இருந்தது.
மன்னார் எரிபொருள் நிலையங்களில் தற்பொழுது டீசல் பலத்த தட்டுபாடு நிலவி வருகின்றது. ஆனால், பெற்றோல் தற்பொழுது இங்குள்ள எரிபொருள் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், தங்கள் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றுச் செல்வதையும் நோக்கக்கூடியதாக இருந்தது.
ஆனால் மண்ணெணெய் ஒரு குடும்பத்துக்கு ஒரு அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை ஐந்து லீற்றர் மண்ணெணெய் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படடிருந்த பொழுதும் மண்ணெணெய் குறைவாகவே வந்துள்ளமையால் நபருக்கு 200 ரூபாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
மீனவர்களுக்கு ஏற்கனவே மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தீர்மானத்துக்கு ஏற்ப எரிபொருள்கள் ஒவ்வொரு மீனவ சங்கங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் மண்ணெணெய் மற்றும் டீசல் தட்டுப்பாட்டால் தனியார் போக்குவரத்து சேவைகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.
அதேநேரத்தில், எரிபொருள் இங்கு வந்திருந்த வேளையில் ஊரடங்கு சட்டம் இருந்தபொழுது மண்ணெணெய் வாங்க வந்திருந்தவர்களுக்கு எரிபொருள் நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த பொழுதும், ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு தேவைகளுக்கு தங்கள் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் அதிகாரமும் வழங்கப்படவில்லை என வட மாகாண எரிபொருள் நிலையங்களுக்கான அத்தியட்சகர் இவ்வாறு எரிபொருள் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்கள் வந்ததும் பொலிசாரின் பாதுகாப்பிலேயே வழங்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY