
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மக்கள் ஆவணங்களை வழங்கி உறுமயவுக்கு உதவ கோரிக்கை

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் உறுமய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவுசெய்து மக்களுக்கான காணி உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறும் இங்கு அதிகாரிகளுக்குப் பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)