மக்களுக்கு நிவாரணம்

மக்களுக்கு நிவாரணம்

பண்டாரவளை - கபரகலை பகுதியில் கடந்த மாதம் 19 திகதி ஏற்பட்ட திடீர் மண்சரிவு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான முதற்கட்ட நிவாரண உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம் அவர்களது நண்பர்களின் அனுசரணையுடன் மாக்கந்தை முகாமிற்கு நேரில் சென்று உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்.

கபரகலை பகுதியில் கடந்த மாதம் 19ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட படப்பிடிப்பு உரிமையாளர் சங்கம் நேரில் சென்று குறித்த 75 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்ததுடன், சமைத்த உணவினையும் வழங்கி வைத்தனர்.

மக்களுக்கு நிவாரணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More