போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையில் கண்டனப் பேரணி!

நாட்டில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும், வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உடனடித்தீர்வுகாணுமாறு அரசை வலியுறுத்தும் வகையிலும், இன்றைய அவல நிலைக்கு காரணமான அரசைக் கண்டிக்கும் வகையிலும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராட்டகளத்தில் குதிக்கவிருக்கின்றது.

இதனடிப்படையில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலங்களின் வெளிப்பாடாகவும், இன்றைய மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளமையால் அனுபவிக்கும் துயரங்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு முஸ்லிம்காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

நாளாந்தம் எகிறிவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பற்றாக்குறை, கட்டண அதிகரிப்புகள், பால்மா மற்றும் எரிபொருட்கள், சமையல் எரிவாயு என்பவற்றுக்கான கியூவரிசைகளும் அவற்றால் ஏற்பட்ட தாக்கங்களினாலான மரணங்கள் என பல்வேறு நெருக்கடி நிலமைகளால் மக்கள் பதைபதைக்கும் போது பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவத்தார்.

இதன்படி முதலாவது பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனப் பொதுக் கூட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுளள்து.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் நடைபெற்ற கட்சியின் முக்கிய கூட்டமொன்றில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தலைவர் ரவூப் ஹக்கிமுடன், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இன, மத, கட்சி பேதகங்களுக்கு அப்பால் மேற்படி போராட்ட பேரணியையும், கண்டனப் பொதுக்கூட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்து நடத்தவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசங்களிலிருந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஆரம்பமாகி நடைபெறவிருப்பதுடன், மாவட்டத்தின் முக்கிய நகரமொன்றில் பேரணிகள் ஒருங்கிணைந்து அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் இடம்பெறுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

பேரணிகளாக மக்கள் ஒருங்குசேரும், பொதுக் கூட்டம் நடைபெறும் இடம்பற்றி பின்னரே அறிவிக்கப்படுமெனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையில் கண்டனப் பேரணி!

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More