
posted 10th August 2022
அரசு ஒரு பொருளுக்கு விலையை அதிகரித்து விட்டால் வர்த்தக நிலையங்களில் அப் பொருளின் விலை உடன் அமுலுக்கு வந்துவிடும். ஆனால் விலை குறைக்கப்படால் அப் பொருளின் விலையோ அமுலுக்கு வர காலங்கள் கடந்து செல்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பருப்பு, மிளகாய், கிழங்கு, சீனி, வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்தும் வியாபாரிகள் அதை நடைமுறைப்படுத்தப் பின்னடிக்கிறார்கள். அதற்கேற்றவாறு, உடன் பதிலாக, அவ்வாறு குறைக்கப்பட்ட பொருட்களைத் தாங்கள் இன்னமும் கொள்முதல் செய்யவில்லை சொல்கிறார்கள்
விலை அதிகரித்தால் உடனே பண்டங்கள் விலை அதிகரித்து விற்பனை செய்யும் இவர்கள் ஏன் விலை குறைந்தால் குறைத்து விற்பனை செய்வதில்லை என நுகவோரால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)