posted 22nd May 2023
துயர் பகிர்வோம்
பேருந்து மோதி உயிரிழப்பு
இந்து கோயில் முன்றலில் தூங்கிய மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞரை இ. போ. ச. பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏறாவூர் சாலைக்கு சொந்தமான பேருந்து கல்முனையில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் ஏறாவூர் சாலைக்கு திரும்பியது.
அப்போது, கிரான்குளம் விஷ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞரை மோதிவிட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.
ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)