பெரும் தொகைப் பணத்தைக் கடனாகக் கேட்கும் இ.போ.ச.வின் தலைமையகம்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வட பிராந்தியத்திலுள்ள 7 சாலைகளிலும் உள்ள நிலையான வைப்புப் பணத்தில் 150 மில்லியன் ரூபாவை கடனாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு போக்குவரத்துச் சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வட பிராந்திய முகாமையாளர் 7 சாலைகளுக்கும் இது குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியையடுத்து வட பிராந்திய சாலைகளிடம் இவ்வாறு நிதி கோரப்பட்டுள்ளது. இந்த பணத்தை 10 தவணைகளில் மீள வழங்குவதாகத் தலைமையகம் உத்தரவாதமளித்துள்ளது.

எனினும் வாகன உதிரிப்பாகங்களின் நெருக்கடி நீடிக்கும் நிலையில் சாலைகளில் உள்ள வைப்புப் பணத்தைத் தலைமையகத்துக்கு மாற்றவேண்டாம் என வடபிராந்திய இ.போ.ச. தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

பெரும் தொகைப் பணத்தைக் கடனாகக் கேட்கும் இ.போ.ச.வின் தலைமையகம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House