பெருந்துடுப்பாட்ட போட்டி
பெருந்துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூிக்கு எதிரான பெருந்துடுப்பாட்ட போட்டியில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

புதன்கிழமை தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 3 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி - சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் மோதும் பெருந்துடுப்பாட்டப் போட்டி வியாழக்கிழமை ஆரம்பமானது.

116ஆவது போட்டியாக மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதனால், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அண்டர்சன் சச்சின் - குகனேஸ்வரன் கரிசன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 27 ஓவர்கள் இணைந்து ஆடி மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர்களை சோதித்தது.

எனினும், இந்த இணை 59 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், கரிசன் 41 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆனார். அவர் 89 பந்துகளில் 3 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 41 ஓட்டங்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த எபநேசர் ஜேசியல் அண்டர்சன் சச்சினுடன் இணைந்து நிதானம் காட்டினர். எனினும், இருவராலும் அதிக ஓட்டங்களைப் பெற முடியவில்லை. இந்நிலையில், 125 பந்துகளில் 20ஓட்டங்களைப் பெற்றிருந்த அண்டர்சன் சச்சின் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

எபநேசர் ஜேசியல் 16, அந்தோனிப்பிள்ளை சுகேதன் 11 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பிய நிலையில், கமலபாலன் சபேசன், ஜெயச்சந்திரன் ஆஷ்நாத், சங்கீத் கிரேம் ஸ்மித் ஆகியோர் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

எனினும், எட்டாவது விக்கெட்டுக்காகக் களமிறங்கிய அன்ரன் அபிஷேக் அதிரடியாக ஆடினார். அவரின் ஆட்டத்தால் சென். ஜோன்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று வேகமாக உயர்ந்தது. அவருக்கு பக்கபலமாக தமிழ்க்கதிர் அபிரஞ்சன் நின்றார்.

அபிஷேக் 52 பந்துகளில் 3 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 40 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிரஞ்சன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இறுதி விக்கெட்டாக கிருபானந்தன் கஜகர்ணன் ஓர் ஓட்டத்துடன் வீழ்ந்தார்.

84.1 ஓவர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. யோககதாஸ் விதுசன் மட்டும் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் ஜெயதீஸ்வரன் விதுசன், விநாயகசெல்வன் கவிதர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரஜித்குமார் நியூட்டன், திலீப்குமார் கௌதம் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி நேற்றைய முன்னையநாள் நாள் ஆட்டம் முடிவில் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடக்க வீரர்களான தகுதாஸ் அபிலாஸ் ஓட்டம் எதையும் பெறாமலும், ஜெயதீஸ்வரன் விதுசன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வெள்ளிக்கிழமை (22) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமாகும்.

பெருந்துடுப்பாட்ட போட்டி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY