
posted 13th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்
பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்றுக் ஞாயிறு (12) காலை 9.30 மணியளவில் குறிதத் பெண்கள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறிகாந்தி தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச பெண்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, பெண்களுக்கான தொழில் சார் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும், அதிகரித்த மின் கட்டணம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிகளவில் நெருக்கடிக்குள்ளாவதாக தெரிவித்த அவர்கள், இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)