புனித தலமாக திருக்கோணேஸ்வரக் கோவில் பிரகடனப்படுத்த வேண்டும்

திருக்கோணேஸ்வரம் கோவிலை புனித தலமாக பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், ஆலயத்தின் புனித தன்மையை இல்லாதொழிக்க எடுக்கப்படும் செயல்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (21) நடைபெற்ற அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது உரையில்;

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும், வரிகளை அதிகரித்தலும், அறவிடுதலும் சாதாரண ஏழை மக்கள் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். இன்று சிலநேரங்களில் சில குடும்பங்கள் ஒருவேளை அல்லது இரு வேளை மாத்திரம் சாப்பிடும் நிலைமையே உள்ளது. இந்த நிலைமை அதிகரித்துவிடக்கூடாது.

அத்துடன், லஞ்ச ஊழல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படல் வேண்டும். அதனுடன், தொடர்புடையவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும். ஏற்கனவே, வங்குரோத்து நாடாகக் கூறப்படும் நிலைமைக்கு நம் தேசம் வருவதற்கு கட்டுப்பாடற்ற ஊழல்கள் தான் காரணம்.

பாதுகாப்பு நிதி யுத்தத்துக்குப் பின்னரும் அதே அளவிலேயே ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது?

வடக்கு, கிழக்கில் இந்துக் கோயில்களை தொல்பொருள் திணைக்களம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதுடன், பௌத்த விகாரைகளை கட்டுவதிலும் ஈடுபடுகின்றது.

பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் கோயில்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தில் சுற்றுலாத் தளத்தை உருவாக்கி மிகப்பெரிய பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு பல்வேறு விடயங்களை செய்து கோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை இல்லாது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த ஆலயத்தின் 18 ஏக்கர் காணியை அபகரிக்கும் நிலைமையும் உருவாகியுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தி திருக்கோணேஸ்வரத்தை புனிதத் தலமாக பிரகடனப்படுத்த வேண்டும்.

இதேபோன்று குருந்தூர் மலையிலும் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறிக் கட்டிய கட்டிட நிர்மாணங்கள் உடனே நிறுத்துப்பட வேண்டும். இவை தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தப்போவதில்லை, என்றார்.

புனித தலமாக திருக்கோணேஸ்வரக் கோவில் பிரகடனப்படுத்த வேண்டும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More