
posted 23rd May 2022
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனி ஆளாக இருந்த போதும் பிரதமர் பதவியை பெற்றதிலிருந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொது மக்கள் பலரினதும் நம்பிக்கையை பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
நாட்டில் இன்னமும் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறையவில்லை. கேஸ், பெட்ரோல், டீசல் என பல விடயங்கள் இன்னமும் சுமுகமான விநியோகத்துக்கு வரவில்லை.
அத்துடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலரும் பதுக்கி வைத்து அசாதாரண தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதை காண முடிகிறது.
இந்த நிலையில் வங்குறோத்தான நாட்டின் பிரதமர் பதவியை துணிச்சலுடன் பெற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பது தெரிகிறது.
பாராளுமன்றத்தில் தனி ஆளாக இருந்த போதும் அவர் அதிர்ஷ்டசாலி என்பதில் சந்தேகமில்லை. அதே போல் மிக இலகுவாக, பிரச்சினைகள் எதுவும் இன்றி மீண்டும் புதிய அமைச்சரவையை உருவாக்கியமை மூலம் பிரதமர் ரணிலின் அனுபவமும் முதிர்ச்சியும் தெரிகிறது.
அதே போல் நுரைச்சோலை மின் நிலையம் சீர் செய்யப்பட்டிருப்பதும் பிரதமருக்கும் நாட்டுக்கும் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
எமது கட்சியை பொறுத்தவரை நாட்டின் நலனே பிரதானமானதாகும். நாட்டுக்காக யார் சேவை செய்தாலும் அதை பாராட்டுவோம். நாட்டை யார் சீரழிக்க முயன்றாலும் அதை கண்டிப்போம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY