பிரியாவிடை
பிரியாவிடை

கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.எச். ஹலீம் ஜௌஸி, நிர்வாக உத்தியோகத்தர் எம். அப்துர் ரஹீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த உத்தியோகத்தர்களின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் பாராட்டிய மாநகர முதல்வர், அவ்வுத்தியோகத்தர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களை விடுவிக்கும் பத்திரங்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

துயர் பகிர்வோம்

டொக்டர் அர்ஷாத் காரியப்பர், தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.எம். நிசார், நூலகர் ஏ.சி. அன்வர் சதாத், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான ஏ.எஸ். நளீரா, எம்.எஸ். வஜீதா, எப். சஹ்னா ரபியசாம், திருமதி வி. மாலழகன், ரி. கலையாழினி, எம்.எஸ். ஷிரீன் சிதாரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். நஜீஹா ஆகியோரே கல்முனை மாநகர சபையில் இருந்து வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாவிடை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Mahanadhi - மகாநதி - 11 - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 12.12.2025

Varisu - வாரிசு - 12.12.2025

Read More
Varisu - வாரிசு - 11.12.2025

Varisu - வாரிசு - 11.12.2025

Read More