
posted 29th May 2022
தற்போது நடைபெற்று வருகின்ற கல்விப் பொது சாதாரண தரப்பரீட்சையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பிரதேச பாடசாலை ஒன்றிலுள்ள பரீட்சை நிலையத்தில், அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவருக்காக போலி பரீட்சாத்தியாக சமூகமளித்து, பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
உண்மையான பரீட்சாத்தியின் அனுமதி அட்டைக்கு ஏற்றவாறு அவரது அடையாள அட்டையில் தனது புகைப்படத்தை மாற்றி, குறித்த இளைஞர் சிங்கள மொழி மூலம் சமய பாட பரீட்சைக்கு தோற்றியபோதே மேற்பார்வையாளர்களினால் இந்த ஆள்மாறாட்டம் கண்டறியப்பட்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (27) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY