
posted 29th May 2022
மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாபதி விவேகானந்தன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலய உத்தியோகஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு காரண கர்த்தாக்களாகச் செயற்பட்ட ஆசிரியப் பெருந்தகைகள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY