பாதுகாப்பற்ற தொங்கு பாலம் கால் முறிந்த குடும்பப் பெண்

இயக்கச்சி பகுதயில் இயங்கும் தனியார் பண்ணை ஒன்றின் பாதுகாப்பற்ற தொங்கு பாலத்தில் இருந்து வீழ்ந்த இளம் குடும்பப் பெண் கால் முறிந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்கச்சி ஆழியவளை வீதியில் அமைந்துள்ள குறித்த பண்ணைக்கு அதிகலவிலான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

இங்கு பொழுதுபோக்கு, விளையாட்டு தளங்கள் காணப்படுகின்றது, இதனால் நாளாந்தம் நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.

நேற்று ஞாயிறு (11) வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த இளங்குடும்பத்தினர் தொங்கு பாலத்தினூடாக பயணித்துள்ளனர். இதன் போது தொங்கு பாலம் ஆட்டம் கண்டு துள்ளி எழுந்துள்ளது. இதனால் இப் பெண் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார், தூக்கி வீசப்பட்ட பெண்னின் காலில் உடைவு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வாகன வசதிகள் இல்லை. இதனால் 45 நிமிட தாமதங்களின் பின் 1990 அவச நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற தொங்கு பாலம் கால் முறிந்த குடும்பப் பெண்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More