
posted 7th October 2023
துயர்பகிருங்கள்
பாதிக்கப்பட்ட மீனவருக்கு வலைகள்
40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகள் மேசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டூர் புயலினால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகளே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேறைறைய தினம் 06.10.2023 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 18 லட்சம் ரூபா, செலவில் குறித்த நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மெசிடோ நிறுவன பணிப்பாளர் யாட்சன் மற்றும் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)