
posted 28th March 2022

நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரை கல்வி கற்று இன்று உயர் நிலையில் மிளிரும் பழைய மாணவர் ஒருவருக்கு இப்பாடசாலையில் பெரும் கௌரவம் அளிக்கப்பட்டது.
மேற்படி பழைய மாணவரான நிந்தவூரைச் சேர்ந்தவரும் வெளிமாவட்டம் ஒன்றில் முன்னணி நிறுவனமொன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றியவருமான கலாநிதி. ஏ.பி. முஹம்மட் அஸீம் என்பவருக்கே இந்த கௌரவம் கிடைத்தது.
குறித்த கமு/கமு/நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில், 2021 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்ற சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழா இன்று திங்கட்சிழமை, அதிபர் எம்.ஐ. இஸ்ஹாக் தலைமையில், நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதம அதிதியாக குறித்த பழைய மாணவர் கலாநிதி. ஏ.பி. முஹம்மட் அஸீம் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை சமூகத்தினரால் அன்னாரும் கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற இந்த சாதனையாளர் பாராட்டு விழாவில், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம். சரீப்டீன் கௌரவ அதிதியாகவும், கல்முனை வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். றசீன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
“இன்றைய நமது இளம் சிறார்கள் தான் நாளைய நற்பிரஜைகளாவர். இவர்களது முன்னேற்றம் பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை, வீட்டுச் சூழலும் இணைந்ததாகவே ஊக்குவிப்பு அமைய வேண்டும். எனது இன்றைய உயர்வுக்கு வித்திட்ட இப்பாடசாலையை எளிதில் மறந்துவிட முடியாது” என பிரதம அதிதியும் பழைய மாணவருமான அஸீம் தமது உரையில் குறிப்பிட்டார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House