
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பல்கலைக் கழக ஊழியர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும்
அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்குண்டு தவித்துக்கொண்டிருந்த நமது நாட்டை, தனியாக வந்து மீட்டெடுத்து நாளுக்கு நாள் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த 65 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வைத்தர முன்வரவேண்டும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம். ரி. எம். தாஜுடீன் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி, பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்திருக்கும் பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி விரைந்து தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)