பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

உயிரிழந்த 11 மாதக் குழந்தை

சளி மற்றும் முட்டு வருத்தம் காரணமாக 11 மாதக் குழந்தை ஒன்று நேற்று செவ்வாய் (29) உயிரிழந்தது.

காரைநகரை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தையே உயிரிழந்தது.

குழந்தை முட்டு வருத்தத்தால் அவதிப்பட்ட நிலையில் அதிகாலை காரைநகர் பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அக் குழந்தை யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மதியம் குழந்தை உயிரிழந்தது.

மரண விசாரணைகளை யாழ். போதனா மருத்துமவனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஐம்பத்தாறாயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.56 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சமயம், வீட்டில் வைத்து ஹெரோயினை சிறிய பைக்கெற்றுகளில் அடைத்துக் கொண்டிருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

கைதானவர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 24 வயது நபர் என்றும் அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் அறிய வருகிறது.



மணல் அகழ்வைத் தடுத்தவருக்கு நடந்தது…

சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி , மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவர் மணல் அகழ்வு கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற் று முன்தினம் பருத்தித்து றை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் வலிக்கண்டி, குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தரிசியன் ஆவார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;

கடந்த திங்கட்கிழமை (28) இரவு 9:00 மணியளவில் வலிக்கண்டிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தது. ஒரு சுமை மணல் மண் சட்ட விரோத மணல் அகழ்வாளர்களால் அள்ளிச் சென்ற நிலையில் மீண்டும் மணல் அள்ளிச்செல்ல வந்த நிலையிலேயே கிராம இளைஞர்களால் வாகன உரிமையாளரை சிறப்பு அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் விசேட அதிரடி படையினரிடம் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த கப் ரக வாகன உரிமையாளர் மற்றும் இளைஞர்கள் செவ்வாய்க் கிழமை (29) காலை 10 மணியளவில் வலிக்கண்டிப் பகுதிக்கு சென்று இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அஞ்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More