பலவகைச் செய்தித் துணுக்குகள்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் விசேட அதிரடைப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மாங்குளம் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பின்தொடர்ந்து வந்த விசேட அதிரடிப்படையினர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர் வேலி கரந்தன் சந்திப்பகுதியில் கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் விசாரணையில் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தப்படவுள்ளார்.



மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் முழுமையடையவுள்ளது.

அரசியல் பேதமின்றி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

நல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு ஆளுநர் கடந்த 27ஆம் திகதி நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளார்.

ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம், மற்றையது சுற்றுலா தொடர்பான விடயம் என இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இந்த இரண்டுமே ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதும், சட்ட விரோதமானதும், முறையற்றதுமாகும். மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்துக்கு இது முரணானது.

மாகாண சபைச் சட்டத்தின்படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயல்படுத்த முடியும் என்றுள்ளது. எனவே, ஆளுநருக்கு சட்ட வாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை. எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேர்ச்சியதிகரமாக இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார் இருக்கக் கூடிய அதிகாரங்களையும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம். அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அரசியல் ரீதியில், எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக்கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More