பல கோடி பெறுமதித் தங்கக் கடத்தல் - கைதான இருவர்

பல கோடி பெறுமதித் தங்கக் கடத்தல் - கைதான இருவர்

சுமார் 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்த முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த போது, குறித்த தங்கத்துடன் ஆமர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தங்கம் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு கடத்த தயாராக இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட மாதகல் பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முறையற்ற அனுமதியுடன் மணலேற்றியவர் கைது

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் முறையற்ற அனுமதியை பயன்படுத்தி மணல் ஏற்றி சென்ற இரு டிப்பர்களின் சாரதிகள், பொலிஸ் காவலரணில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை (23) அவர்கள் முன்னிலைப்படுத்ப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாந்தை கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்தும் மணல் வளங்கள் அகழப்பட்டு, ஏற்றப்படுகின்றன என்று, பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

விசேட பொருளாதார மத்திய நிலைய திறப்பு

சாவகச்சேரி மட்டுவிலில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள், பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 20 கோடி ரூபாய் செலவில் இந்த யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நிலையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பல கோடி பெறுமதித் தங்கக் கடத்தல் - கைதான இருவர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House