பருத்தித்துறை நகரசபையால் மின்னியல் நூலகம் திறப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பருத்தித்துறை நகரசபையால் மின்னியல் நூலகம் திறப்பு

வடமராட்சி பருத்தித்துறை நகர சபையால் மின்னியல் நூலகம் ஒன்று நேற்று (13) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை செயலாளர் திருமதி தாரணி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு சிறுவர் மின்னியல் நூலகம், உட்பட மூன்று மின்னியல் நூலக தொகுதிகளும் நிகழ்வின் பிரதம விருந்தினர் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண அவர்களால் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்கள், அதிகாரிகளுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது

தொடர்ந்து அரங்கத்தில் நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்கல சுடர்களை தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, சிறப்பு விருந்தினர், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் டபிள்யூ சுனில், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி.சிறிவரன் முன்னாள் தவிசாளர்களான யோசப் இருதயராசா, வெ.நவரட்ணம், நகரசபை செயலாளர் திருமதி தாரணி, உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து மின்னியல் நூலக அங்கத்தவர்களுக்கான இலவச அங்கத்துவ அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது.
மின்னியல் நூலகத்தில் கணனி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்ந்து கருத்துரைகளை தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவரும் நிகழ்வின் பிரதம விருந்தினருமான பேராசிரியர் நந்த தர்மரட்ண, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் டபிள்யூ சுனில், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி சிறிவரன் உட்பட பலரும் நிகழ்த்தினர்.

இதில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ண, தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில், தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன், மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர்களான திரு, இருதயராசா, வே நவரட்ணம், பருத்தித்துறை நகரசபை உத்தியோகஸ்தர்கள், மின்னியல் நூலகத்தில் பயிற்சி பெற்ற அயல் பாடசாலைகளின் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

பருத்தித்துறை நகரசபையால் மின்னியல் நூலகம் திறப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More