
posted 25th May 2022
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நியூமோனியா காய்ச்சலினால் அவதியுற்ற பாடசாலை சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இறந்த இச் சிறுவனின் பூதவுடல் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீரூடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தைச் சார்ந்த 8ஆம் தரம் கல்வி பயின்ற மாணவன் கடந்த சனிக்கிழமை (21.05.2022) வயிற்றில் ஏற்பட்ட வலியால் அவதியுற்றுள்ளார்.
இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முச்சக்கர வண்டியை நாடிய போது எரிபொருள் இன்மையால் உடன் வைத்தியசாலைக்கு இச் சிறுவனை அழைத்துச் செல்ல முடியாத நிலை எற்பட்டு சிறுவன் இறந்துவிட்டான்.
பிரேத பரிசோதனையில் சிறுவன் நியூமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பிறகு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து, சடலம் டீசைட் தோட்டத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திங்கள் கிழமை (23.05.2022) மாலை 4 மணியளவில் சிறுவனின் ஆத்ம இளைப்பாற்றிக்காக தோட்ட வேளாங்கன்னி மாதா தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றது.
ஆராதனையின் பின்பு சிறுவனின் பூத உடல் தோட்ட கத்தோலிக்க சேமக்காலையில் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY