பராமரிப்பற்ற நிலையிலுள்ள மலசல கூடம் மக்களின் பாவனைக்கு

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையினர், கரவெட்டி பிரதேச சபையோ பாராமுகமாக இருக்காது, மலசல கூடத்தைத் தூய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் சிலர் அங்கே மது அருந்துதல், போதைப்பொருள் பாவனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் பேருந்து நிலையம், அதனை சூழவுள்ள பகுதிகள், மலசலகூடங்கள் என்பன வெற்று பியர் ரின்கள், வெற்று மதுப்போத்தல்கள் அவ்விடத்தில் காணப்படுகின்றன.

இவ்வாறான செயல்பாடுகளால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் அச்சத்துடனையே இறங்கி செல்கின்றனர்.

எனவே, இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பற்ற நிலையிலுள்ள மலசல கூடம் மக்களின் பாவனைக்கு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More